வகைப்படுத்தப்படாத

பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை தாமதப்படுத்த அநேகமானோர் ஆதரவு

(UTV|COLOMBO) – சர்ச்சைக்குரிய பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை தாமதப்படுத்த வேண்டும் என்ற கொள்கைக்கு பிரித்தானிய பாராளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரெக்ஸிட் ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு பிரித்தானிய பாராளுமன்றத்தில் நேற்று(19) இடம்பெற்றதுடன் இதில் ஒப்பந்தமின்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கு 322 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.

தீர்மானத்துக்கு எதிராக 306 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதுடன் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனின் பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான தீர்மானம் மீண்டும் பின்னடைவை சந்தித்துள்ளது.

இதனால், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பில் எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு பின்னர் ஒன்றியத்திடம் கால அவகாசம் பெறவேண்டிய நிலையை போரிஸ் ஜோன்சன் எதிர்நோக்கியுள்ளார்.

எவ்வாறாயினும், தான் தனது பிரெக்ஸிட் ஒப்பந்தத்திற்காக எந்தவித அச்சமுமின்றி தொடர்ந்தும் செயற்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பிரித்தானியா அறிவிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறும் என அழுத்தமாகத் தெரிவித்த பிரதமருக்கு இந்தத் தோல்வி ஒரு பின்னடைவாகக் காணப்படுகின்றது.

அவ்வாறு இருக்க கடந்த 37 ஆண்டுகளில் சனிக்கிழமை ஒன்றில் பிரித்தானிய பாராளுமன்றம் கூடியமை இதுவே முதல்தடவையாகு என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி அன்பளிப்புகள்

நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க தயார்-அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல

Over 2000 drunk drivers arrested in less than a week