கேளிக்கை

பிரியா வாரியர் நடித்த குளியலறை காட்சிக்கு எதிர்ப்பு

(UTV|INDIA)-கடந்த ஆண்டு கண் சிமிட்டலால் ஒட்டுமொத்த இளைஞர்களையும் கொள்ளை கொண்டவர் நடிகை பிரியா வாரியார். தற்போது இவரது நடிப்பில் ஸ்ரீதேவி பங்களா என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை பிரசாந்த் மாம்பூலி இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில், கடந்த ஆண்டு நடிகை ஸ்ரீதேவி துபாயில் குளியல் தொட்டியில் மூச்சுதிணறி இறந்துபோனார். தற்போது, வெளியான டீசரில் நடிகை பிரியா வாரியார் குளியல் தொட்டியில் இறந்துகிடப்பது போன்ற காட்சி உள்ளது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளரும், ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் இயக்குனருக்கு சட்டப்படி நோட்டீஸ் அனுப்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், இந்த படத்தில் ஸ்ரீதேவி என்பது பொதுவான பெயர் என்றும் இதனை நான் முறைப்படி சந்திப்பேன் என இயக்குனர் கூறியுள்ளார்.
1 நிமிடமும் 49 வினாடியும் ஓடும்  ஸ்ரீதேவி பங்களா டிரெய்லரில் பிரியா வாரியர் கிளாமராக தோன்றுகிறார். டீசர் முடிவில்,  ஸ்ரீதேவியின் மர்ம மரணம் குறித்த குறிப்புகளைக் காட்டும் ஒரு குளியல் தொட்டியும் காட்டப்படுகிறது.

Related posts

கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் – முதலிடம் பிடித்த இளம் நடிகை

ரஜினி மகள் சௌந்திரயாவின் மறுமணம் திகதி

நயனுக்கு பிறந்த நாள்