சூடான செய்திகள் 1

பிரியங்காவை காங்கிரஸ் தலைவராக தெரிவு செய்ய வேண்டும் – பீட்டர் அல்போன்ஸ்

(UTVNEWS | COLOMBO) -அவசரமாக அகில இந்திய காங்கிரஸ் குழு கூட்டத்தை கூட்டி பிரியங்காவை உடனடியாக தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம் பெற்ற பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இராஜினாமா செய்தார்.

இதனை தொடர்ந்து பிரியங்காவை புதிய தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை காங்கிரஸ் கட்சிக்குள் பரவலாக எழுந்துள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான காங்கிரஸின் முத்த உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், பிரியங்காவை புதிய காங்கிரஸ் தலைவராக உடனே தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

Related posts

பூஜித் ஜயசுந்தரவுக்கு பிணை

UPDATE-மாத்தறை-பெலியத்தை புகையிரத சேவை ஆரம்பம்

மூன்றாவது நாளாகவும் தொடரும் தொழிற்சங்க போராட்டம்