உலகம்

பிரித்தானிய பொதுத் தேர்தலில் 22 வயது இளைஞர் சாம் வெற்றி.

சமீபத்தில் நடந்து முடிந்த பிரிட்டன் (uk) பொதுத் தேர்தலில் 22 வயது இளைஞர் ஒருவர் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தொழிலாளர் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்ற சாம் கார்லின் (Sam Carling) “நாடாளுமன்றத்தின் குழந்தை” என்று அழைக்கப்படுவார் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

வடமேற்கு கேம்பிரிட்ஜ்ஷயர் தொகுதியில் 39 வாக்குகள் அதிகம் பெற்று இவர் வெற்றி பெற்றார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டதாரியான சாம், சுமார் 22 ஆண்டுகள் எம்.பி.யாக பணியாற்றிய ஷைலேஷ் வராவை தோற்கடித்தார்.

தனது வெற்றியை “அரசியல் பூகம்பம்” என்று வர்ணித்த சாம், இன்னும் அதிகமான இளைஞர்கள் அரசியலுக்கு வருவார்கள் என்று நம்புவதாகக் கூறினார்.

Related posts

இஸ்ரேல் – ஐக்கிய அரபு இராஜ்ஜியம் புதிய வரலாற்றுப்பூர்வ ஒப்பந்தம்

நியூஸிலாந்தில் பொதுத்தேர்தல் ஒத்திவைப்பு

அமெரிக்காவை தொடர்ந்து பிரேசில்