வகைப்படுத்தப்படாத

பிரித்தானிய பொதுத் தேர்தல் இன்று

(UDHAYAM, COLOMBO) – ரித்தானிய பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் இன்று (08) நடைபெறுகின்றது.

பிரித்தானிய 650 பாராளுமன்ற தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடைபெறுகின்றது. இதில், தெரசா மே, கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சியைத் தக்க வைப்பாரா? என்பது அரசியல் அவதானிகளின் கவனத்தை ஈர்த்த விடயமாகவுள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்றத்தின் ஆயுள் காலம் 2020-ம் ஆண்டுதான் முடியும் நிலையில் இருந்தது. ஆனால், அந்த நாடு, ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக திடீரென முடிவு எடுத்தது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இந்த மாதம் 19-ஆம் திகதி நடக்க உள்ளது.

இந்த நிலையில் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு நாட்டில் வலிமை வாய்ந்த, நிலையான தலைமை தேவை என்று கூறி பாராளுமன்றத்துக்கு திடீர் தேர்தலை நடத்தப்போவதாக பிரதமர் தெரசா மே அறிவித்தார். இதற்கு நாடாளுமன்றமும் ஒப்புதல் அளித்தது.

அதைத்தொடர்ந்து பாராளுமன்றத்துக்கான தேர்தல் இன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

Related posts

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Emmy winning actor Rip Torn passes away at 88

போர் தொடரும் – ஜனாதிபதி பஸார் அல் அசாத்