உள்நாடு

பிரித்தானியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – பிரித்தானியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் 60 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் நோக்கி பயணித்த யு எல் 504 எனும் விமானமூடாக குறித்த இலங்கையர்கள் இன்று(20) காலை 8.22 அளவில் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவரும் செயற்திட்டத்திற்கமைய இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அழைத்துவரப்பட்ட அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி. சி. ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

 srilankan airlines இன் 42 விமானிகள் இராஜினாமா

ரஜரட்ட ரெஜின தடம்புரள்வு

மேலும் 17 கடற்படையினர் பூரண குணம்