உள்நாடு

பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட கழிவுகளை மீள அனுப்ப நடவடிக்கை

(UTV | கொழும்பு) – வெளிநாட்டு கழிவுகள் அடங்கிய 21 கொள்கலன்களை இங்கிலாந்திற்கு மீள அனுப்புவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு கழிவுகள் அடங்கிய கொல்கலன்கள் கொண்டுவரப்பட்டன.

குறித்த கொள்கலன்களில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் காணப்பட்டமை முதற்கட்ட விசாரணையின் ஊடாக தெரியவந்த நிலையில், குறித்த 21 கொள்கலன்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மருதமுனை இரட்டை படுகொலை சந்தேக நபரான தந்தையை 14 நாட்கள் விளக்கமறியல்

எதிர்வரும் 12ம் திகதி முதல் சமையல் எரிவாயு சந்தைக்கு

வவுனியா வைத்தியசாலையில் நடந்த மோசமான செயல்- ஆளுநர் அதிரடி நடவடிக்கை