உலகம்

பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சருக்கு கொரோனா

(UTV|கொழும்பு) – பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சரும், கன்சர்வேடிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான நடீன் டோரிஸிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அவர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஐக்கிய இராஜ்ஜியத்தில் 6 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

மேலும், 382 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.

இங்கிலாந்தில் 324 பேரும், ஸ்காட்லாந்தில் 27 பேரும், வடக்கு அயர்லாந்தில் 16 பேரும், வேல்ஸில் 15 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டனின் சுகாதார முகமை தகவல்கள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தனது வாக்கினை பதிவு செய்தார் ட்ரம்ப்

தோல்வியடைந்தால் நாட்டை விட்டும் ஓடத் தயார்

இந்தியாவிலும் பலி எண்ணிக்கை அதிகரிப்பு