உலகம்

பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு 3 ஆண்டுகள் சிறை

(UTV |  பிரான்ஸ்) – பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நீகோலா சர்கோஸீ மீதான ஊழல் வழக்கில் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி உட்பட மேலும் இருவரை பணியிடை நீக்கம் செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2014ஆம் ஆண்டில் பிரான்ஸ் ஜனாதிபதி பதவியை நிறைவு செய்த பிறகு, வேறொரு வழக்கின் தகவலுக்கு உபகாரமாக மதிப்புமிகு வேலை கிடைக்க உதவி செய்வதாக ஒரு நீதிபதிக்கு லஞ்ச பேரம் பேசியதாக சர்கோஸீ மீது குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து, 66 வயதாகும் சர்கோஸீ சிறை தண்டனை பெறும் பிரான்ஸின் முதலாவது முன்னாள் அதிபராகியிருக்கிறார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து சர்கோஸீ சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இந்த மேல்முறையீடு நடைமுறை காரணமாக, அதில் முடிவெடுக்கப்படும் வரை சர்கோஸீ சிறையில் அடைக்கப்படமாட்டார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நோபல் பரிசு: இரு பத்திரிகையாளர்களுக்கு அறிவிப்பு

48 மணி நேரத்திற்குள் வெளியேறுங்கள் : மலேசிய அரசு உத்தரவு

லண்டனில் யூதர்களுக்கு ஆதரவாக 1 இலட்சம் பேர் பேரணி!