வகைப்படுத்தப்படாத

பிரான்ஸ் பொதுத் தேர்தல் – ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் கட்சியே பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றும் என தெரிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – பிரான்ஸ் பொது தேர்தலின் இறுதி சுற்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின்  சென்ரிஸ்ட் கட்சியே பெரும்பான்மையான ஆசனங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

557 ஆசனங்களைக் கொண்ட பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் 445 ஆசனங்கள் இவருக்கும் இவரது ஆதரவு கட்சிகளுக்கும் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதியால் பிரேரிக்கப்பட்டுள்ள சீர்திருத்த கொள்கைகளை இலகுவாக நிறைவேற்ற முடியும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் இமானுவல் மக்ரோன் வெற்றி பெற்று பதவி ஏற்றார்.

நேற்று காலை ஆரம்பமான வாக்குபதிவு நடவடிக்கைகளுக்காக 50 ஆயிரம் மேலதிக படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Related posts

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்

பிரதமர் கிந்தோட்டை பிரதேசத்திற்கு விஜயம்

Warning issued for Filipinos seeking jobs in UAE