உலகம்

பிரான்ஸ், இத்தாலியை தாக்கிய ‘அலெக்ஸ்’ புயல்

(UTV | பிரான்ஸ் ) – பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதிகள் மற்றும் இத்தாலியின் வடமேற்கு பகுதிகளை ‘அலெக்ஸ்’ புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மணிக்கு 112 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளி காற்றை தொடர்ந்து கடும் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன

பிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள நைஸ் நகரம் இந்தப் புயல் மற்றும் மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நைஸ் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இத்தாலியின் ஆஸ்டா பள்ளத்தாக்கு மற்றும் பீட்மாண்ட் பிராந்தியத்தில் 2 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 17 பேர் காணாமல் போயுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ஸ்வீடன் முதல் பெண் பிரதமராக மக்தலீனா

முதன்முறையாக பைடன் வெற்றியை ஒப்புக் கொண்ட ட்ரம்ப்

கொரோனா வைரஸ் – இதுவரை 2345 பேர் பலி