உலகம்

பிரான்ஸில் இன்று முதல் கட்டுப்பாடுகள் தளர்வு

(UTV|பிரான்ஸ் )- பிரான்ஸில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகளை இன்று(15) முதல் தளர்த்தவுள்ளதாக, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, விருந்தகங்கள் மற்றும் உணவகங்களை முழுமையாக திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அத்துடன், பாடசாலை கல்வி நடவடிக்கைகளையும் எதிர்வரும் 22ஆம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான பயணங்களை மேற்கொள்ளவும், பிரான்ஸ் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை, பிரான்ஸின் இது முதலாவது வெற்றி என குறிப்பிட்டுள்ள அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன், கொரோனா வைரஸ் மீண்டும் பரவுவதற்கான அபாயம் காணப்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் 157,220 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 29,407 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜப்பான் நாட்டில் அவசரகால நிலை பிரகடனம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுடன் மோதும் ஹேக்கர்கள்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தீ விபத்து