உலகம்

பிரான்ஸின் மூத்த இராணுவ அதிகாரி கைது

(UTV | பிரான்ஸ்) – பிரான்ஸின் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் முக்கிய தகவல்களை ரஷ்ய உளவுத்துறைக்கு அளித்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு மீறல் ஒன்று நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த அதிகாரி முக்கிய தகவல்களை ரஷ்யாவுக்கு கொடுத்திருக்கலாம் என்றும் பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் ப்ளோரன்ஸ் பார்லி (Florence Parly) தெரிவித்துள்ளார்.

அந்த அதிகாரி லெப்டினண்ட் கர்னல் என்ற நிலையிலிருப்பவர் என்றும், இத்தாலியில் அவர் பணியிலிருந்ததாகவும், ரஷ்யாவுக்காக உளவு பார்த்தாதாக சந்தேகத்தின்பேரில் அவர் விசாரணைக்குட்படுத்தப்ப்ட்டுள்ளதாகவும் தெரிகிறது.

ரஷ்ய மொழி பேசத்தெரிந்த அந்த அதிகாரி, இத்தாலியில் ஒரு ரஷ்ய உளவாளியை சந்தித்தது தெரியவந்துள்ளது. அவர், முக்கிய ஆவணங்களை ரஷ்ய உளவுத்துறைக்கு அளித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஆகவே, அந்த அதிகாரி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார். பிரான்சில் விடுமுறையை முடித்துவிட்டு இத்தாலிக்கு புறப்படும் நேரத்தில் அவர் பிரெஞ்சு உளவுத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

IMF இன் இரண்டாவது கடன் தவணை தாமதம்!

ஐ.நா. பொது செயலாளர் இராஜினாமா செய்ய வேண்டும் – இஸ்ரேல் கோரிக்கை.

ஓமானில் மசூதி அருகே துப்பாக்கி சூடு – 4 பேர் பலி – பலர் காயம்.