சூடான செய்திகள் 1

பிரான்சில் தேசிய தின கொண்டாட்டத்தில் மோதல்

(UTVNEWS | COLOMBO) -பிரான்சில் தேசிய தின கொண்டாட்டத்தில் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் வன்முறை வெடித்து பரீஸ் நகரம் போர்க்களமாக காட்சி அளித்தது.

பிரான்சில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்வை எதிர்த்து கடந்த நவம்பர் மாதம் மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் கார் டிரைவர்களின் மஞ்சள் அங்கியை அணிந்துகொண்டு போராடுவதால் இது மஞ்சள் அங்கி போராட்டம் என அழைக்கப்படுகிறது.

வார இறுதிநாட்களில் மட்டும் நடைபெறும் இந்த போராட்டம் பிரான்சை ஸ்தம்பிக்க வைத்தது. மக்களின் போராட்டத்துக்கு அடிபணிந்த அரசு எரிபொருள் மீதான வரி உயர்வை ரத்து செய்தது. ஆனாலும் அரசின் பல்வேறு கொள்கைகளுக்கு எதிராக மஞ்சள் அங்கி போராட்டம் தொடர்கிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பிரான்சின் தேசிய தின கொண்டாடங்கள் விமரிசையாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்த பிறகு நூற்றுக்கணக்கான மஞ்சள் அங்கி போராட்டக்காரர்கள், சாம்ப்ஸ் எலிசீஸ் பகுதிக்கு வந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறை வெடித்துள்ளது.

பொலிஸார் மீது கற்களையும், போத்தல்களையும் வீசி எறிந்த போராட்டக்காரர்கள் வீதியில் குப்பை தொட்டிகளை கவிழ்த்து தீவைத்தனர். இதனையடுத்து பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் போராட்டக்காரர்களை விரட்டி அடித்தனர். இதனால் தேசிய தின கொண்டாட்டத்தின் போது பரீஸ் நகரம் போர்க்களமாக காட்சி அளித்தது.

Related posts

கோட்டாவுக்கு எதிரான எவன்கார்ட் வழக்கு ஒத்திவைப்பு

தட்டம்மை நோய் 700 வீதத்தினால் அதிகரிப்பு…

அமைச்சர் விமலிடமிருந்து முன்னாள் அமைச்சர் ரிஷாட் 100 கோடி கோரி நஷ்டஈடு