சூடான செய்திகள் 1

பிரமாண்டமான விகாரை யாழில் திறப்பு!(PHOTOS)

(UTV|COLOMBO)- யாழ்ப்பாணம் – நாவற்குழியில் முதல் சிங்கள குடியேற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான பௌத்த விகாரை திறந்துவைக்கப்படவுள்ளது. யுத்தத்திற்கு பின்னர் வடக்கில் அமைக்கப்படும் பிரமாண்டமான பௌத்த விகாரை இதுவாகும்.

சம்புத்தி சுமன என பெயரிடப்பட்டுள்ள இந்த விகாரை அமைச்சர் சம்பிக்க ரணவக்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

இன்றைய திறப்பு விழாவில் நூற்றுக்கணக்கான பௌத்த மதகுருமார்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் நாவற்குழி ரயில் நிலையத்திற்கு அருகில், நூற்றுக்கணக்கான சிங்கள மக்கள் அத்துமீறி குடியிருந்தனர்.

விகாரை அமைக்கும் பணி ஆரம்பித்தபோது, சாவகச்சேரி பிரதேசசபையினால் அதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதன்பின்னர் அமைச்சர் சஜித்தின் தலையீட்டையடுத்து, சாவகச்சேரி பிரதேசசபையும் விகாரை அமைக்க அனுமதியளித்தது.

தமிழர்கள் வாழும் பகுதிகள் சிங்களமயமாக்கப்பட்டு வருவதாக தமிழ் மக்கள் மற்றும் தமிழ் தலைமைகளினால் பரவலாக குற்றம் சுமத்தப்பட்டுவரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் இவ்வாறு விகாரை அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பு, கம்பஹா, குருனாகல் மாவட்டங்களில் தொடர்ந்தும் டெங்கு அபாயம்

கொரோனா; நோயாளிகள் 592, குணமடைந்தோர் 134

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் விசேட அறிவித்தல்