கிசு கிசுகேளிக்கை

பிரபல ‘ராப்’ பாடகர் கிறிஸ் பிரவுன் கைது

(UTV|AMERICA)-அமெரிக்காவை சேர்ந்த பிரபல ‘ராப்’ பாடகர் கிறிஸ் பிரவுன். 29 வயதான இவர் கிராமி விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். கிறிஸ் பிரவுன், தற்போது இசை நிகழ்ச்சிக்காக பிரான்ஸ் தலைநகர் பாரீசில் முகாமிட்டுள்ளார்.

இந்த நிலையில், அங்கு கிறிஸ் பிரவுன் தன்னை கற்பழித்ததாக 24 வயது பெண் ஒருவர் பொலிஸில் புகார் அளித்தார். அந்த பெண் தனது புகாரில் கிறிஸ் பிரவுன், அவரது நண்பர் மற்றும் பாதுகாவலர் ஆகிய 3 பேரும் நட்சத்திர ஓட்டல் அறையில் தன்னை தாக்கி கற்பழித்ததாக தெரிவித்தார்.

இந்த புகாரின் பேரில் பாரீஸ் நகர போலீசார் கிறிஸ் பிரவுன் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் பல மணி நேரம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் விசாரணைக்கு பிறகு கிறிஸ் பிரவுன் விடுவிக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “என் மீதான குற்றச்சாட்டு மிகவும் தவறானது என்பதை மிக தெளிவாக தெரிவிக்கிறேன்” என குறிப்பிட்டார்.

 

 

 

 

Related posts

காஜல் அகர்வாலிடம் 2 முறை காதலை சொல்லிய நவ்தீப்

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு தேவைப்படாது?

உலகளவில் முடங்கிய fb நிறுவன செயலிகள்