கேளிக்கை

பிரபல பாலிவுட் நடிகர் படத்தில் நித்யா

(UTV|INDIA)-விஜய் நடித்த மெர்சலில் காஜல் அகர்வால், சமந்தாவை விடவும் அதிகம் கவனிக்கப்பட்டவர் பிளாஷ்பேக்கில் வரும் ஐஸ்வர்யா எனும் கதாபாத்திரத்தில் நடித்த நித்யா மேனன். தனது துறுதுறு நடிப்பால் தொடர்ந்து கவனம் பெற்றுவரும் நித்யா, மெர்சல் படத்திற்கு பிறகு தற்போது தி அயர்ன் லேடி எனும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க தயாராகிவருகிறார்.

அதுதவிர மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதியுடன் சைக்கோ எனும் படத்திலும் நடிக்கிறார். இந்நிலையில் இந்தியில் நடிகர் அக்‌‌ஷய் குமார் நடிக்கும் மி‌ஷன் மங்கள் எனும் படத்திலும் நடிக்கவுள்ளார் நித்யா. செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோள் நிகழ்வுகளை மையமாக வைத்து தயாராகும் இந்தப்படம் ஒரு விண்வெளிப் படமாக உருவாகிவருகிறது.

இப்படத்தினை ஜெகன் ‌ஷக்தி இயக்கவுள்ளார். இந்த படத்தில் இணைந்ததன் மூலம் ஆங்கிலப்படம் தொடங்கி தமிழ் வரை ஒரு ரவுண்டு வந்துவிட்ட நித்யா மேனன் முதன்முறையாக இந்தியில் நுழைகிறார். இதில் அவருடன் இணைந்து வித்யா பாலன், சோனாக்‌ஷி சின்கா, டாப்சி என இந்தியில் கலக்கிக் கொண்டிருக்கும் முன்னணி நடிகைகளும் இந்தப் படத்தில் நடிக்க உள்ளனர்.

 

 

 

 

Related posts

பிரபல திரைப்பட இசையமைப்பாளர் மரணம்

செல்வராகவனின் மரண மொக்கை ஓடிடியில்

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் நான்