வகைப்படுத்தப்படாத

பிரபல பாடகி ஜின்ஜர் பயணித்த கார் 60 அடி பள்ளத்தில் பாய்ந்து கோர விபத்து!!!

(UTV|COLOMBO)-தெனியாய இசை நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வதற்காக சென்ற பிரபல சிங்கள பாடகி ஜின்ஜரின் கார்  விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் குறித்த கார்  சுமார் 60 அடி பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து இடம்பெறும் போது காரில்  4 பேர் பயணித்துள்ள நிலையில் , அவர்கள் அனைவரும் படுகாயமடைந்த நிலையில் தெனியாய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில்  , ஜின்ஜர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளர்.

சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டதால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கக்கூடும் என காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

குறித்த சந்தர்ப்பத்தில் , காரில்  ஜின்ஜர் உள்ளிட்ட அவரின் 7 வயது மகன் மற்றும் அவரின் உறவினரின் மகனும் மற்றும் சாரதி ஆகியோர் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

MMDA சட்டமூலம் தொடர்பில்: முஸ்லிம் எம்பிகள் கையளித்தவை என்ன ? முழு அறிக்கை இதோ

கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி

Women’s World Cup 2019: Fans react to US vs Netherlands final