கேளிக்கை

பிரபல நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்

(UTV|INDIA)-பிரபல மலையாள நடிகை ஸ்வேதா மேனன், நான் அவன் இல்லை 2, அரவான், துணை முதல்வர் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ஸ்வேதா மேனன், படப்பிடிப்பு ஒன்றுக்காக மும்பையில் உள்ளார். இவரது செல்போனுக்கு நேற்று சிலர் பேசியுள்ளர். தெரியாத நம்பரில் இருந்து வந்த அந்த அழைப்பில் பேசியவர்கள், மலையாள நடிகர் சங்கத் தேர்தலில் நிர்வாக குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதற்கு வாழ்த்துக்கள் கூறினர்.

தொடர்ந்து சில நிமிடங்களில் மீண்டும் செல்போன் அழைப்புகள் வந்தன. நம்பரும் பெயரும் இல்லாமல் வந்த அந்த அழைப்பை எடுத்து பேசிய ஸ்வேதா மேனனை, எதிர்முனையில் இருந்தவர்கள் ஆபாசமாக திட்டினர். அதோடு அவரை கொன்று விடுவதாகவும் மிரட்டினர். இதனைத் தொடர்ந்து ஸ்வேதா மேனன், போலீசில் புகார் செய்தார்.

மலையாள நடிகர் (அம்மா) சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர் பதவிக்கு ஸ்வேதா மேனன் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அவருக்கு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இது பற்றி ஸ்வேதா மேனன் கூறும்போது, நான் நடிகர் சங்க உறுப்பினராக இருக்கிறேன். இதற்கு முன்பும் பல நடிகைகள் நிர்வாக குழு உறுப்பினர்களாக இருந்துள்ளனர். ஒவ்வொரு தேர்தலிலும் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். கீது மோகன்தாஸ், காவ்யா மாதவன், ரம்யா உட்பட பலர் இருந்துள்ளனர். இதையடுத்து நானும் போட்டியிடுகிறேன். மிரட்டல் குறித்து கவலையில்லை என்று கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

சுஷாந்த் சிங் மரணம் – CBI விசாரணை

பக்ருவுக்கு கொரோனா தொற்று

15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி சம்பளம்