வகைப்படுத்தப்படாத

பிரபல நடிகருக்கு 5 ஆண்டு சிறை!!

(UTV|INDIA)-அரியவகை மான்களை வேட்டையாடியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த வழக்கில் பொலிவுட்டின் பிரபல நடிகரான சல்மான் கானுக்கு ராஜஸ்தான் நீதிமன்றம் 5 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

பிரபல இந்தி நட்சத்திரங்களான சல்மான் கான், சைஃப் அலிகான், நடிகை தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் 1998 ஆம் ஆண்டு, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடந்த ‘ஹம் சாத் சாத் ஹே’ என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டனர்.

அங்கு அவர்கள் வேட்டைக்கு சென்றிருந்த நிலையில் , அரிய வகை மான்களை நடிகர் சல்மான் கான் வேட்டையாடியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

அதன்படி, அவர் உட்பட 7 பேர் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கடந்த 20 ஆண்டுகள் இந்த வழக்கின் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் கடந்த மாதம் 28ம் திகதி இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போது அனைத்து சாட்சிகளும் , விசாரணைகளும் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஒத்தி வைத்தார்.

தீர்ப்பு இன்று வெளியாவதாகக் கூறப்பட்டது.

இதையொட்டி பொலிவுட் நடிகர்கள் சல்மான் கான், சைஃப் அலிகான், தபு உள்ளிட்டோர் நீதிமன்றில் இன்று முன்னிலையாகினர்.

பின்னர் தீர்ப்பளித்த நீதிபதி, இந்த வழக்கில் சல்மான் கான் குற்றவாளி என அறிவித்தார்.

வழக்கில் இருந்து சைஃப் அலிகான், தபு, சோனாலி உட்பட 5 பேர் விடுவிக்கப்பட்டனர்.

தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

அதன்படி ,அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

நியூஸிலாந்து தாக்குதல்தாரி மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு!!

“PSC will reveal truth of Easter Sunday attacks” – Premier

அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்பில் புதிய விலை