கேளிக்கை

பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலை

(UTV | இந்தியா) –  பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தனியார் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் சித்ராவுக்கு தொழில் அதிபர் ஹேமநாத் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஜனவரியில் திருமணம் நடக்கலாம் என கூறப்பட்டது.

இந்நிலையில், சென்னை நாசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவலறிந்து வந்த பொலிஸார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகை சித்ராவின் இந்த முடிவு அவரது ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த அந்த காந்தக்குரல்

விருதை திருப்பி அளித்த ‘பிக்பொஸ் பாலாஜி’

உலக வசூலில் புதிய சாதனை படைத்த அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்