கேளிக்கை

பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் சர்ச்சைக்குரிய மகளிர் தின வாழ்த்து!

(UDHAYAM, CHENNAI) – ராம் கோபால் வர்மா என்றாலே எப்போதும் சர்ச்சை கருத்திற்கு பஞ்சம் இருக்காது. எந்த முன்னணி நடிகரையாவது சீண்டிக்கொண்டு இருப்பார்.

விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகளில் கடவுளை கூட விட்டு வைக்க மாட்டார்.

இந்நிலையில் இன்று பெண்கள் தினத்தை அனைவரும் கொண்டாடி வரும் நேரத்தில் ‘உலகில் உள்ள அனைத்து பெண்களும் சன்னி லியோன் போன்று ஆண்களுக்கு மகிழ்ச்சியை தர வேண்டும் என விரும்புகிறேன்’ என ராம் கோபால் வர்மா ட்வீட்டியுள்ளார்.

வழக்கம் போல் இந்த கருத்தை பலரும் எதிர்க்க, அவர் அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்துக்கொண்டே இருக்கின்றார்.

Related posts

என் கதைக்கு என்ன தலைப்போ அதைத்தான் சூட்டுவேன்-கமல் கோபம்

விஜய் 62 க்கு புதிய தடை

‘டெடி’ ரெடி