உள்நாடுசூடான செய்திகள் 1

பிரபல அரசியல்வாதி ஒருவரின் மகனை அச்சுறுத்தி தங்க நகை கொள்ளை!

(UTV | கொழும்பு) –

பம்பலப்பிட்டி பிரதேசத்தில் பிரபல அரசியல்வாதி ஒருவரின் மகனை அச்சுறுத்தி அவரிடம் இருந்த தங்க நகையை ஒருவர் கொள்ளையடித்துள்ளார்.

சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் பிரதான அரசியல் கட்சியொன்றின் செயலாளரும் பலம் வாய்ந்த அரசியல்வாதி ஒருவரின் மகனன் நேற்று (04) மாலை 4.15 மணியளவில் தனது நண்பியுடன் பம்பலப்பிட்டி ​லேயாட்ஸ் வீதியில் உள்ள கிராம அதிகாரி அலுவலகத்திற்கு அருகில் சொகுசு காரில் சென்றுள்ளனர்.

இருவரும் காரை நிறுத்தி பேசிக் கொண்டிருந்த போது, ​​அந்த இடத்துக்கு சைக்கிளில் வந்த நபர் ஒருவர், அவர்களிடம் மிரட்டி பணம் கோரியதாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் அவர் அருகில் இருந்த கல்லை எடுத்து காரை தாக்க முயன்றுள்ள நிலையில், அரசியல்வாதியின் மகன் கழுத்தில் இருந்த சுமார் ஒரு பவுன் எடையுள்ள தங்க நகையை கழற்றி தனது நண்பியின் கைப்பையில் இட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த நபர் இடுப்பில் இருந்த கத்தியை காட்டி மிரட்டி காருக்குளிருந்த கைப்பையை எடுத்துக்கொண்டு தான் வந்த சைக்களில் ஏறி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் அந்த அரசியல்வாதியின் மகன் தனது நண்பியையும் காரையும் அவ்விடத்திலிருந்து அனுப்பிவைத்து விட்டு பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு தொலைபேசியில் இது குறித்து அறிவித்துள்ளார்.

கொள்ளையர் தனது சைக்கிளில் அருகிலுள்ள கடைக்கு சென்றுள்ள விதம் சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது. இதேவேளை, கொள்ளையர் வெள்ளவத்தை பிரதேசத்தை சேர்ந்த ரோக்ஸிவத்தை ரஞ்சி என அடையாளங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

போதைப்பொருளுக்கு அடிமையான சந்தேக நபரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளதுடன், கொழும்பு தெற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹசந்த மாரப்பனவின் மேற்பார்வையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மைத்திரி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

மெண்டி போதைப்பொருளுடன் ஒருவர் கைது

இன்று ஜனாதிபதி தலைமையில் சர்வ கட்சி கூடுகிறது!!