கேளிக்கை

பிரபஞ்ச அழகியாக தென் ஆப்பிரிக்காவின் டெமி லெய் தேர்வு

(UTV-COLOMBO)-பிரபஞ்ச அழகியாக தென் ஆப்பிரிக்க நாட்டின் 22 வயது டெமி லெய் நீல் பீட்டர்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் 66-வது பிரபஞ்ச அழகிப் போட்டி(மிஸ் யுனிவர்ஸ்) நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. இதில் 92 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர்.

பல்வேறு சுற்றுகளை கொண்ட இந்த போட்டியின் இறுதிச் சுற்றுக்கு 22 வயது தென் ஆப்பிரிக்கா அழகி டெமி லெய் நீல் பீட்டர்ஸ், ஜமைக்காவின் டேவினா பென்னட்(22), கொலம்பியா நாட்டின் லாரா கோன்சலெஸ்(21) தாய்லாந்து நாட்டை சேர்ந்த மரியா போனெர்ட்லாப், வெனிசுலாவின் கெய்சி சயாகோ ஆகிய 5 அழகிகள் முன்னேறினர்.

கேள்விக் கணைகளால் துளைத்தெடுக்கப்பட்ட விறுவிறுப்பான இறுதிச்சுற்றில் தென் ஆப்பிரிக்காவின் டெமி லெய் சாமர்த்தியமாக பதில் அளித்து பிரபஞ்ச அழகி பட்டத்தை தட்டிச் சென்றார். இவர், வர்த்தக மேலாண்மை படிப்பில் பட்டம் பெற்றவர்.

டெமி லெய் தென் ஆப்பிரிக்கா அழகியாக பட்டம் வென்ற ஒரு மாதத்துக்கு பின்பு, அதாவது கடந்த ஜூன் மாதம் 7-ந்தேதி ஜோகன்னஸ்பர்க் நகரில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை மர்ம மனிதர்கள் சிலர் துப்பாக்கி முனையில் கடத்தினர். ஆனாலும் அவர்களுடன் துணிச்சலுடன் தன்னந்தனியாக போராடி தன்னை விடுவித்துக் கொண்டு உயிர் தப்பினார். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்காப்பு கலை பயிற்சி பெற்று இருந்ததால் இவ்வாறு தன்னால் போராட முடிந்தது என்று அப்போது அவர் கூறி இருந்தார்.

பிரபஞ்ச அழகியாக தேர்வானது குறித்து டெமி லெய் கூறுகையில் “இந்த ஆண்டு போட்டி மிகவும் கடுமையாக இருந்தது. அதில் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார். டெமி லெய்க்கு கடந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பிலிப்பைன்ஸ் அழகி ஐரிஸ் மிட்டெனர் கிரீடம் அணிவித்தார்.

2-வது இடம் பிடித்த கொலம்பியா அழகி லாரா கோன்சலெஸ் நடிகை ஆவார். 16 வயதில் இருந்தே நடிக்கத் தொடங்கினார். கலை இயல் பயற்சி பள்ளியில் பட்டம் பெற்ற அவர் பொகோடோ நகருக்கு இடம் பெயர்ந்து நடிப்பை முழு நேர தொழிலாக்கி கொண்டவர்.

3-ம் அழகியாக வெற்றி கண்ட ஜமைக்காவின் டேவினா பென்னட், மாடல் அழகி ஆவார். மார்க்கெட்டிங் படிப்பில் மேற்கு இந்திய தீவுகள் பல்கலைக்கழகத்தில் இளம்நிலை பட்டம் பெற்றவர் ஆவார்.

அமெரிக்காவின் சார்பில் பங்கேற்று மிக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட காரா மெக்குலப், பிலிப்பைன்ஸ் அழகி ராச்சல் பீட்டர்ஸ் ஆகியோர் முதல் 10 இடங்களுக்குள் வர முடிந்தாலும் இறுதிச் சுற்றுக்கு முன்னேற இயலவில்லை.

அண்மையில் சீனாவின் சான்யா நகரில் நடந்த உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் வெற்றி பெற்று இருந்ததால் பிரபஞ்ச அழகிப்போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்ட அழகி ஸ்ரத்தா சசிதர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அவர் முதல் 10 இடங்களுக்குள் வராமல் ஏமாற்றம் அளித்தார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

ஜோடி இல்லாமல் நடிக்கும் கார்த்தி

விக்னேஷ் சிவன் மதம் மாறிவிட்டாரா?

இரண்டு பாகங்களாக உருவாகும் ‘விடுதலை’