சூடான செய்திகள் 1

பிரதேச மக்கள் காருக்கு தீ வைத்து எரிப்பு: திருமலையில் சம்பவம்

(UTVNEWS|COLOMBO) – கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் அறுவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றிரவு இடம் பெற்றுள்ளது.

திருகோணமலை நகர் பகுதியில் இருந்து நிலாவெளி நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு காரொன்று அலஸ்தோட்டம் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில், வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் முச்சக்கர வண்டியையும், துவிச்சக்கர வண்டியையும் மோதிவிட்டு அருகில் நின்ற பெண்ணுடன் மோதியதாகவும் தெரியவருகின்றது.

இதனால் கோபம் கொண்ட பிரதேச மக்கள் காருக்கு தீ வைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து அந்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொணடுள்ளனர்.

Related posts

இலங்கைக்கு ஷரிஆ பல்கலைக்கழகங்கள் அவசியம் இல்லை-பிரதமர்

13குறித்த கோடபாய வாய் திறப்பாரா? SLPP MP சன்னஜெயசூசுமன

வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளராக சரித ஹேரத்