உள்நாடு

பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!

(UTV | கொழும்பு) –

08 பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உட்பட 12 உயர் பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய, நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாக பணிபுரியும் போது பிரிதி பொலிஸ் அதிபராக பதவி உயர்த்தப்பட்ட கொழும்பு மத்திய பிரிவிற்கு பொறுப்பாக இருந்த கயங்க மாரப்பன, பதுளை பிரிவுக்கு பொறுப்பாக இருந்த சுஜித் வெதமுல்ல மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திற்கு பொறுப்பாக இருந்த சமந்த விஜேசேகர ஆகியோர் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான புத்திக சிறிவர்தன, கபில களுபிட்டிய, எச். சமுத்திரஜீவ, பி. அம்பாவில மற்றும் சமந்த டி சில்வா ஆகிய மேஜர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களான ஜி.ஆர்.கந்தேவத்த, நெரஞ்சன் அபேவர்தன, எம்.எம்.குமாரசிங்க மற்றும் உபுல சேனவிரத்ன ஆகியோரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தற்போதைய சமூக ஒழுங்கில் சிறுவர்கள் தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டுமென களுத்துறை பிரதேசத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஸ்பந்து தென்னகோன் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

விமானப்படையின் தளபதிக்கு கொரோனா

வாக்காளர்களுக்கு வழங்க கொண்டுவரப்பட்ட உலர் உணவு பொதிகள் மீட்பு – 3 பேர் கைது – மன்னாரில் சம்பவம்

editor

கொரோனாவுக்கு மேலும் 67 பலி