உள்நாடு

பிரதி சபாநாயகர் பதவி குறித்து பிரதமர் ரணிலின் பரிந்துரை

(UTV | கொழும்பு) – பிரதி சபாநாயகர் பதவிக்கான வெற்றிடம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு பொருத்தமான ஒருவரை நியமிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தப் பதவிக்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிக்க பரிசீலிக்க வேண்டும் என்று பிரதமர் பரிந்துரைத்திருந்ததாக தெரிவிக்கபப்டுகின்றது.

இதன் மூலம் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்திற்கு பலம் சேர்க்கும் என பிரதமர் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

“பிரதமர் பதவி விலகுவதே சிறந்தது, தீர்மானம் பிரதமர் கையில்”

STF முகாம்கள் 3 தனிமைப்படுத்தலுக்கு

கொரோனாவை கட்டுப்படுத்த சுமார் 8 கோடிக்கு இயந்திரம்