அரசியல்உள்நாடு

பிரதியமைச்சர் முனீர் முழப்பர் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்பு சங்க உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல்

தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் முனீர் முழப்பர் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்பு சங்க உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று கடந்த 31 ஆம் திகதி நீதி அமைச்சில் இடம்பெற்றது.

இதன்போது, தேசிய
ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பதவி உயர்வு,‌ ஆட்சேர்ப்பு நடைமுறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலின் போது குறித்த பிரச்சினைகள இனங்கண்டு கட்டம், கட்டமாக தீர்வு காண்பதற்கு உடன்பாடு எட்டப்பட்டது.

இக்கலந்துரையாடலில் நீதி அமைச்சின்‌ மேலதிக செயலாளர், உதவி செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

-கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்

Related posts

தென் கடலில் 300 கிலோ போதைப்பொருளுடன் 6 பேர் கைது

ரஞ்சன் தொடர்பில் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை

இலங்கையில் குழந்தைகளுக்கான வளர்ப்பு பெற்றோர் முறைமையை உடனடியாக ஆரம்பிக்க திட்டம்