உள்நாடு

பிரதான கங்கைகளின் நீர் மட்டம் உயர்வு

(UTV | கொழும்பு) – நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் பெய்து வரும் குறிப்பிடத்தக்க மழையினால் அத்தனகல்ல ஓயா, மஹா ஓயா, களனி கங்கை மற்றும் களு கங்கை ஆகிய ஆறுகளின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இந்நிலைமை காரணமாக குக்குலே ஆற்று நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, புலத்சிங்கள பிரதேசத்தில் சிறு வெள்ள நிலைமை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.பி.சி.சுகிஸ்வர தெரிவித்துள்ளார்.

Related posts

மனு நிராகரிப்பு

ஏப்ரல் 12-14ம் திகதிகளில் கலன்கள்,பீப்பாய்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது

சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா!