வகைப்படுத்தப்படாத

பிரதம நீதியரசர் கே.ஸ்ரீ பவன் இன்று ஓய்வுபெறவுள்ளார்

(UDHAYAM, COLOMBO) – பிரதம நீதியரசர் கே.ஸ்ரீ பவன் இன்று ஓய்வுபெறவுள்ளார்.

இலங்கையின் 44 ஆவது பிரதம நீதியரசராக கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி முதல் கடமையாற்றிய நிலையிலேயே கே. ஸ்ரீபவன் இன்று ஓய்வுபெறுகிறார்.

இதேவேளை புதிய பிரதம நீதியரசர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் அரசியலமைப்பு பேரவை அதன்  தலைவரான சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நேற்றிரிவு கூடியது.

இதன் போது புதிய நீதியரசர் நியமனத்திற்கு  நீதியரசர் பிரியசாத் டெப்பை சிபார்சு செய்துள்ளது.  அரசியலமைப்பு பேரவையின் இந்த சிபார்சு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related posts

கீதாவின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இன்று வழங்கிய அதிரடி உத்தரவு!

சட்டவிரோதமாக இலங்கை வந்துள்ள 3 பேர் கைது

Lion Srilal Fernando, MJF appointed District Governor of Lions Clubs International District 306 A1