கிசு கிசு

பிரதமர் மஹிந்த பதவி விலகுவாரா?

(UTV | கொழும்பு) – தான் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக சமுக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு மக்கள் ஏமாற வேண்டாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தற்போதைக்கு பதவியை விட்டு விலகுவதற்கோ அல்லது வேறு யாரிடமாவது ஒப்படைக்கும் எண்ணமோ இல்லை. தம்மைப் பற்றியோ அல்லது அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களைப் பற்றியோ பல்வேறு வதந்திகள் பரப்பப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் இவை அப்பட்டமான பொய்கள் என்றும் பிரதமர் தெரிவித்திருந்தார்.

சர்வகட்சி மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதமர், ரணில் விக்கிரமசிங்க அரசியலில் முதிர்ச்சியடைந்தவர் எனவும் அவர் சர்வகட்சி மாநாட்டிற்கு ஆதரவளிக்க வந்தமை மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.

Related posts

சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை?

“டேவிட் பெக்காம்” கார் ஓட்டத் தடை!

தனியாக வரும் பெண்களுக்கு ஓட்டலில் சாப்பாடு கிடையாது?