உள்நாடு

பிரதமர் மஹிந்த நாளை பங்களாதேஷ் நோக்கி பயணம்

(UTV | கொழும்பு) – இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை பங்களாதேஷ் நோக்கி பயணிக்கவுள்ளார்.

பங்களாதேஷின் தந்தையாக கருதப்படும் பங்கபந்து ஷெயிக் முஜிபர் ரஹ்மானின் ஜனன தின நூற்றாண்டு விழா மற்றும் பங்களாதேஷின் சுதந்திர பொன்விழா ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக பிரதமர் அங்கு பயணிக்கவுள்ளார்.

அத்துடன் அங்கு நாளை பிற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையும் ஆற்றவுள்ளதாக அவரது ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது பங்களாதேஷ் பிரதமர், ஜனாதிபதி, வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பங்களாதேஷ் வங்கியின் ஆளுநர் ஆகியோரையும் அவர் சந்திக்கவுள்ளார்.

விவசாயம், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரவியின் முன்மொழிவுக்கு அரசாங்கம் உடன்படுவதாக பிரதமர் ஹரிணி தெரிவிப்பு

editor

மக்கள் விரும்பும் மாற்றம் ஏற்பட்டுள்ளது – எமது அனுபவம் நாட்டிற்கு தேவையானது – டக்ளஸ்

editor

இன்று முதல் சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

editor