சூடான செய்திகள் 1

பிரதமர் நாளை கிளிநொச்சிக்கு விஜயம்…

(UTV|COLOMBO)-கிளிநொச்சி, முல்லைத்தீவு மாட்டங்களின் வெள்ள அனர்த்த நிலைமைகளை ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அப்பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சிக்கு நாளை (28) விஜயம் செய்யவிருப்பதாக பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ரஞ்சித் மதுத்துமபண்டார தெரிவித்தார்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளம் நிலை தணிந்துள்ள நிலையில், மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.

இதன் காரணமாக மக்கள் மீண்டும் இடைத்தங்கல் முகாம்களுக்கு திரும்புவதாக அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

மாவட்டத்தில் 8 ஆயிரத்து 25 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு உலர் உணவுகள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான சகல வசதிகளையும் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட வீடுகளை புனரமைப்பதற்கு முதல் கட்டமாக ஒரு குடும்பத்திற்கு 10 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படுகின்றன.

சேதத்தை மதிப்பீடு செய்த பின்னர் இரண்டரை இலட்சம் ரூபா வரை இழப்பீட்டை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வெள்ளத்தினால் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஒரு ஏக்கர் வயலுக்கு 40 ஆயிரம் ரூபா வீதம் இழப்பீடு வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

சேதமடைந்துள்ள வீடுகள் வியாபார நிலையங்கள் கிணறுகள் மற்றும் கழிவறைகளை துப்பரவு செய்வதற்குத் தேவையான வேலைத் திட்டங்களை அரச நிறுவனங்களுடன் இணைந்து முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

 

 

 

Related posts

சீரற்ற வானிலையால் இரண்டு விமானங்கள் மத்தளைக்கு திருப்பம்

ஈரானிய சபாநாயகரை மஜ்லிஸூஸ் ஸூரா சந்தித்து பேச்சு

முஸ்லிம் பெண்களுக்கு அநீதி இழைப்படுவதாக குற்றச்சாட்டு