உள்நாடு

பிரதமர் தலைமையிலான குழு இத்தாலி பயணம்

(UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தூதுக்குழு, இத்தாலி​க்கு இன்று (10) காலை பயணமானது.

இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் இந்தத் தூதுக்குழு, இன்று(10) அதிகாலை 3.15க்கு எமிரேட்ஸ் விமானச் ​சேவைக்குச் சொந்தமான ரி.கே. 649 எனும் விமானத்திலேயே ஐக்கிய அமீரகத்தின் டுபாய் நோக்கி பயணித்துள்ளது.

அங்கிருந்து மற்றுமொரு விமானத்தின் ஊடாக, இத்தாலியை நோக்கி அந்தத் தூதுக்குழு பயணிக்கும். இத்தாலியில் உள்ள பொலப்னா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்து கொள்ளும்.

ஜி20 சர்வமத மற்றும் கலாசார மாநாடு – 2021 இன் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு தலைமை உரை ஆற்றவுள்ளவுடன், இராஜதந்திர சந்திப்புகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

Related posts

ஹங்கேரி வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கைக்கு

யாழ் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் விஜயம்.

ஊரடங்கை சட்டத்தை மீறிய 730 பேர் கைது