சூடான செய்திகள் 1

பிரதமர் இன்று(28) கிளிநொச்சி விஜயம்

(UTV|COLOMBO)-பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (28) கிளிநொச்சிக்கு விஜயம் செய்கிறார்.

சீரற்ற காலநிலையின் விளைவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண சேவைகளை நேரில் கண்டறிவது விஜயத்தின் நோக்கமாகும்.இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் பிரதமர் ஆராயவுள்ளார்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கும் சென்று பிரதமர்நிலைமையை நேரில் கண்டறியவுள்ளார்.

அஸ்கிரிய மகாநாயக்க தேரரை இன்று காலை சந்தித்து விசேட ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளும் பிரதமர் அதனையடுத்து தலதா மாளிகையில் இடம்பெறும் விசேட சமய வழிபாடுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

காலை 10.30 இற்கு மல்வத்து மகாநாயக்க தேரரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெறுவதுடன் அங்கு இடம்பெறும் அன்னதான நிகழ்விலும் பிரதமர் கலந்துகொள்ளவுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்துக்குப் பிற்பகல் 1.00 மணிக்கு விஜயம்செய்யும் பிரதமர் அங்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இடம் பெறும் விசேட மாநாட்டிலும் பங்கேற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் துறைசார்ந்த அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இதேவேளை நாளை பொலன்னறுவை, அநுராதபுரம் மாவட்டங்களுக்கும் பிரதமர் விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலன்னறுவையில் சோமாவதி வழிபாட்டுத் தலத்தை தரிசிப்பதுடன் அநுராதபுரத்தில் ஜய ஸ்ரீமகாபோதியையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தரிசிக்கவுள்ளார்.

இதனையடுத்து அநுராதபுரம் ருவன்வெலிசாய வழிபாட்டுத் தலத்திற்கு விஜயம் செய்து அங்கு இடம்பெறும் விசேட சமய வழிபாடுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜந்தாவது முறையாக பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்ட பின் கண்டி தலதா மாளிகை பொலன்னறுவை சோமாவதி அநுராதபுரம் ஜய ஸ்ரீமகாபோதி மற்றும் ருவன்வெலிசாய ஆகிய பிரதான மத வழிபாட்டுத் தலங்களுக்கு விஜயம் செய்கின்றமை இதுவே முதற் தடவையாகும்.

 

 

 

 

Related posts

சீஷெல்ஸ் துணை ஜனாதிபதி இன்று இலங்கைக்கு விஜயம்

பொருளாதார நெருக்கடியால் தொழில்களை இழந்தவர்களுக்கு மீண்டும் தொழில் – அரசின் மகிழ்ச்சியான அறிவிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை…