உள்நாடு

பிரதமர் இத்தாலி விஜயம்

(UTV | கொழும்பு) – பிரதமரின் இத்தாலி விஜயம் தொடர்பில் தௌிவுபடுத்தும் வகையில் வௌிவிவகார அமைச்சு நேற்று(08) பிற்பகல் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

பரிசுத்த பாப்பரசரை சந்திக்க வேண்டும் என பிரதமர் எவ்வித கோரிக்கையும் முன்வைக்கவில்லை எனவும் வத்திக்கானிடம் இருந்து அவ்வாறு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச மாநாடொன்றின் பிரதம உரையாற்றுவதற்காக பிரதமர் அங்கு செல்லவுள்ளதாக கடந்த 06ஆம் திகதி வௌிவிவகார அமைச்சர் தௌிவாக கூறியதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நேற்று(08) இரவு பிரதமர் உள்ளிட்ட குழுவினர் சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இத்தாலி நோக்கி பயணித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மின் துண்டிப்பு – அறிக்கை தொடர்பில் இன்று விசாரணை

கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி 3 பேர் மரணம் – மாம்புரியில் சோகம்

editor

சுகாதார ஊழியர்கள் 27 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைப்பு