உலகம்

பிரதமரை பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம்

(UTV | லெபனான்) – லெபனான் – பெய்ரூட் பயங்கர குண்டு வெடிப்பு தெடார்பாக லெபனான் அரசைக் கண்டித்து பொது மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் நிகழ்ந்த பயங்கரமான குண்டு வெடிப்பில் இதுவரை 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6,000க்கும் அதிகமானோர் காயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. அதோடு கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ள பலரை தேடும் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் சேதத்தை பெய்ரூட் நகரம் சந்தித்துள்ளது. நீண்ட நாட்களாக துறைமுகத்தில் டொன் கணக்கில் இருப்பு வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் என்ற வேதிப் பொருள் தீப்பிடித்து வெடித்ததன் விளைவே இன்று பெய்ரூட் அலங்கோலமாக காட்சியளிக்கிறது.

இந்நிலையில், இந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஆளும் லெபனான் அரசுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டு பிரதமர் ஹசன் பதவி விலக்கோரி பொது மக்கள் பெய்ரூட்டின் வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில், லெபனான் தகவல் தொழிநுட்ப அமைச்சர் மானல் அப்டெல் சமாத் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். மக்களை பாதுகாக்க லெபனான் அரசு தவறிவிட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் நடந்த மிகப் பெரியத் தவறுக்கு லெபனான் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரினார். அந்நாட்டு அரசங்கத்தில் இருந்து இரண்டாவதாக அப்டெல் இராஜினாமா செய்துள்ளார். முதலாவதாக லெபனான் வெளியுறவுத்துறை அமைச்சர் நசீப் ஹிட்டி கடந்த திங்களன்று தனது பதவியை இராஜினிமா செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்தியாவில் பரவும் புதிய கொரோனா தொற்று – இலங்கைக்கு ஆபத்து

ரோஹிங்கியா மக்களை மியன்மார் அரசு பாதுகாக்க வேண்டும்

பாகிஸ்தான் சபாநாயகருக்கு கொரோனா தொற்று உறுதி