வகைப்படுத்தப்படாத

பிரதமரை பதவி நீக்குவது தொடர்பில் ஜனாதிபதியின் தீர்மானம்

(UTV|COLOMBO)-பிரதமரை பதவி நீக்குவது தொடர்பில் சட்டமா அதிபரிடம் மற்றும் சட்டத்தரணிகளிடம் ஆலோசனை பெறவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக , நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் ஜனாதிபதி வாசஸ்தலத்தில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அசராங்கத்தை அமைக்க கூட்டு எதிர்க்கட்சி ஆதரவு வழங்கினாலும் , அதில் அமைச்சுப் பதவிகளை ஏற்கப்போவது இல்லை என ஜனாதிபதிக்கு அறிவித்ததாக குமார வெல்கம மேலும் தெரிவித்தார்.

Related posts

ஜனாதிபதி கொலை முயற்சி

கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக மேலதிக நிதியை வழங்க, அமெரிக்கா தீர்மானம்

காலி இறப்பர் தொழிற்சாலையில் தீப்பரவல்