உள்நாடு

பிரதமரின் பிரதிநிதியாக டக்ளஸ் தேவானந்தா நியமனம்

(UTV | கொழும்பு) –  பாராளுமன்ற சபையின் பிரதமரின் பிரதிநிதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் முன்மொழிவிற்கு நேற்று (2020.11.02) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களின் அனுமதி கிடைத்துள்ளது.

அதற்கமைய பாராளுமன்ற சபையின் பிரதமரினால் நியமிக்கப்படும் பிரதிநிதியாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சபாநாயகரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

20ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய பாராளுமன்ற சபையின் கட்டமைப்பு மாற்றம் பெறுவதுடன், பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், பிரதமரினால் நியமிக்கப்படும் பிரதிநிதி, சபாநாயகரினால் நியமிக்கப்படும் பிரதிநிதி மற்றும் எதிர்க்கட்சி தலைவரினால் நியமிக்கப்படும் பிரதிநிதி ஆகியோர் அதில் அங்கம் வகிக்கின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மேலும் 22 பேர் குணமடைந்தனர்

2022 வரவு- செலவுத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

அரசாங்கத்தை சந்தித்த IMF உயர்மட்ட பிரதிநிதிகள்

editor