உள்நாடு

பிரதமரின் சுதந்திர தின செய்தி

(UTV | கொழும்பு) – அனைத்து இலங்கையர்களும் 73 ஆவது சுதந்திர தினத்தை மிகுந்த பெருமையுடன் கொண்டாடுகின்றனர்.

காலனித்துவ காலத்திலிருந்து சுதந்திரத்திற்கான மக்களின் அர்ப்பணிப்பும் போராட்டமும் உலக வரலாற்றில் நன்கு அறியப்பட்டவை.

அரசியல், மத மற்றும் கலாசார ரீதியாக மூலோபாய போராட்டங்கள் மூலம் சுதந்திரம் பெற்ற நீண்ட வரலாற்றை இலங்கை தேசம் கொண்டுள்ளது.

நாம் பெற்ற சுதந்திரத்தை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளும் செயல்முறையே இன்று நம் தாய்நாட்டிற்கான தேவையாக உள்ளது. நாடுகளிடையே ஒற்றுமையை வளர்த்தல் மற்றும் மத நல்லிணக்கம் என்பன இதற்கு வலுவான ஆதரவாக அமைந்துள்ளன.

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் உள்ளூர் உற்பத்திக்கு மதிப்பளிக்கும் பொருளாதார கொள்கை ஊடாக தாய்நாட்டை அபிவிருத்தியை நோக்கி நகரும் பாதையில் நாம் நுழைந்துள்ளோம்.

ஒவ்வொரு துறையிலும் முன்னெடுக்கப்பட வேண்டிய சீர்திருத்தங்களைப் புரிந்துகொண்டு, மக்களிடம் முன்வைக்கப்பட்ட சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் ஊடாக சுதந்திரம் மேலும் அர்த்தமுள்ளதாகும் போது வளமான எதிர்காலம் – சுபீட்சமான தாய்நாடு என்பது யதார்த்தமாகும்.

வரலாறு முழுவதும், தாய்நாட்டிற்கு எதிரான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சக்திகளையும், பயங்கரவாதத்தையும் தோற்கடிக்கும் ஒரு நிலையான கொள்கையில் நாம் செயற்பட்டோம். எத்தனை சவால்கள் வந்தாலும், நாங்கள் ஒருபோதும் நம் தாய்நாட்டை காட்டிக் கொடுத்ததில்லை.

கொவிட் -19 தற்போது உலகம் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவாலாகும். இந்நெருக்கடியிலிருந்து பொதுமக்களை விடுவிப்பதற்கான போராட்டத்தை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம். எதிரிப் படைகளைத் தோற்கடிப்பதற்கு போன்றே, கொவிட் -19 தொற்றை தோற்கடிப்பதற்கும் இலங்கை தேசமாக நாங்கள் எழுந்து நிற்போம்.

எங்கள் தாய்நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த மற்றும் மகத்தான தியாகங்களைச் செய்த அனைவருக்கும் மற்றும் இன்று அந்த சவால்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்புடன் செயற்படும் அனைவருக்கும் நான் மரியாதை செலுத்துகின்றேன்.

மஹிந்த ராஜபக்ஷ
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின்
பிரதமர்

பிரதமர் ஊடக பிரிவு

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் விளக்கமறியலில்

ஞானசார தேரருக்கு பிடியாணை

‘கடினமான காலங்களில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக இருக்கும்’