உலகம்

பிரதமரின் உயரத்தை கிண்டலடித்த பத்திரிகையாளர் – 5,000 யூரோக்கள் அபராதம்.

இத்தாலி நாட்டின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் உயரம் குறித்து கிண்டலடித்த அந்நாட்டு பெண் பத்திரிகையாளருக்கு நீதிமன்றம் 5,000 யூரோக்கள் அபராதம் விதித்துள்ளது.

இத்தாலியில் சுயாதீன பத்திரிகையாளராக செயல்பட்டு வரும் ஜியுலியா கோர்ட்டீஸ் கடந்த 2021 இல் தனது எக்ஸ் பக்கத்தில் தற்போதைய பிரதமர் மெலோனியின் பின்னணியில் இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு மெலோனியின் உயரம் குறித்து கிண்டலடிக்கும் வகையில் பதிவிட்டிருந்தார்.

ஜியோர்ஜியா மெலோனி…நீங்கள் என்னைப் பயமுறுத்த வேண்டாம். நீங்கள் 1.2 மீட்டர் (4 அடி) உயரம் மட்டுமே உள்ளீர்கள். என்னால் உன்னைப் பார்க்கவே கூட முடியவில்லை” என்று கோர்ட்டீஸ் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

எக்ஸ் தளத்தில் மட்டுமின்றி பல்வேறு சமூக ஊடகங்களிலும், உள்ளூர் ஊடகங்களிலும் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இந்த கருத்து தொடர்பாக இருவருக்குமிடையில் சமூக வலைதளத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் மெலோனி கோர்ட்டீஸ் மீது நீதிமன்றத்தில் உருவ கேலி வழக்கு தொடுத்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த மிலான் நீதிமன்றம் தற்போது கோர்ட்டீஸ்க்கு 5,000 யூரோக்கள் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Related posts

ஜோர்ஜ் ப்ளொய்ட் கொலை – பொலிஸ் அதிகாரிக்கு பிணை

இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்த முதல் ஐரோப்பிய நாடு!

கொவிட்-19 : சிங்கப்பூரில் தொற்றுக்கு உள்ளான 77 பேர் அடையாளம்