வணிகம்

பிரதமரால் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு

(UTV | கொழும்பு) – இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வருமாறு கொரிய முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நாட்டு கொரிய தூதுவர் மற்றும் பிரதமருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தர்ப்பத்தில் இலங்கை பாதுகாப்பான நாடு என தெரிவித்த அவர் கொரிய தூதுவருக்கு இந்நாட்டினுள் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு கோரிகை விடுத்தார்.

கடந்த சில தசாப்தங்களுக்கு முன்னர் கொரிய முதலீட்டாளர்கள் பலர் இலங்கையில் முதலீடுகளை மேற்கொண்டதாக தெரிவித்த பிரதமர் தற்போதைய நிலையில் 115 கொரிய நிறுவனங்கள் இலங்கையில் இயங்கி வருவதாக தெரிவித்தார்.

இதன்போது, கடந்த பொதுத் தேர்தலில் நம்பகமான பிணைப்பு காரணமாகே இந்த மக்கள் ஆணை கிடைத்துள்ளதாக கொரிய தூதுவர் தெரிவித்ததாகவும் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், கொவிட் 19 தொற்று நெருக்கடிக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்க கொரிய அரசாங்கம் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக தூதுவர் தெரிவித்துள்ளார்.

Related posts

எலுமிச்சை பழத்திற்கு தட்டுப்பாடு

ASPI 7000 புள்ளிகளை கடந்தது

14வது தேசிய வணிகத்துறை சிறப்பு விருது