அரசியல்உள்நாடு

பிரச்சினைகளை அரசு ஆதரவில் தீர்க்க நடவடிக்கை – புத்தளத்தில் பைசல் எம்.பி

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைசல் அவர்கள் நேற்று (30) புத்தளம் மணல்குன்று மற்றும் கடையாக்குளம் பகுதிகளுக்கு களப் பயணமொன்றை மேற்கொண்டு அங்குள்ள மக்களின் முக்கிய தேவைகளை கேட்டறிந்தார்.

இதன்போது மணல்குன்று பாடசாலை அதிபரும், ஆசிரியர்களும் கல்வி மற்றும் அடிப்படை வசதிகளில் உள்ள குறைபாடுகளை பைசல் எம்.பியிடம் தெரிவித்ததுடன் நூர் மஸ்ஜிது நிர்வாகத்தினர் கத்தார் சரிட்டி மூலம் மஸ்ஜிதின் மீதமுள்ள பணிகள் நிறைவு செய்யப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் அஷ்ரஃபியா மத்ரசா அதிபர், மத்ரசாவின் தேவைகள் மற்றும் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை பாதைகள் மற்றும் வடிகால்கள் தொடர்பான பிரச்சினைகளை அரசு ஆதரவில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மற்ற வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி உதவிகள் பெற முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் பைசல் எம்.பி தெரிவித்தார்.

அத்தோடு, கத்தார் சரிட்டி மூலம் நூர் மஸ்ஜிதின் மீதமுள்ள பணிகளை நிறைவு செய்ய தூதரகத்தின் மூலம் தொடர்பு கொண்டு உதவி செய்யப்படும் எனவும் அவர் மக்களிடம் உறுதியளித்தார்.

Related posts

சம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலயத்தின் வித்தியாரம்ப விழா

கொத்து மற்றும் சோற்றுப் பொதிகளுக்கான விலை 10% உயர்வு

மின் தடைக்கு காரணம் முந்தைய அரசாங்கங்களே – அமைச்சர் குமார ஜயக்கொடி

editor