உள்நாடு

பிரச்சார பணிகளுக்கு சிறுவர்களை ஈடுபடுத்த வேண்டாம்

(UTV|கொழும்பு) – பொதுத் தேர்தல் காலப்பகுதியில் சிறுவர்களை பிரச்சார பணிகளுக்காக ஈடுபடுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார்.

சில வேட்பாளர்கள் பிரச்சார பணிகளுக்காக காணொளிகள், விளம்பரங்கள், சுவரொட்டிகளில் சிறுவர்களைப் பயன்படுத்தியுள்ளமை தொடர்பில் கண்காணிப்பு அமைப்புகளினால் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனால், சிறுவர்களின் ஆளுமை வளர்ச்சி, மனநிலை, அடையாளம் மற்றும் அவர்களின் எதிர்காலம் என்பன மோசமாகப் பாதிக்கப்படலாமென ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

‘சந்தர்ப்பவாத அரசியல் எங்களிடம் இல்லை’ – சஜித்

ஸ்ரீ லங்கன் விமான சேவை ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை

கொலைகாரனை கைது செய்வது போன்றே ரிஷாதின் கைது இடம்பெற்றது [VIDEO]