சூடான செய்திகள் 1

பின்னணி பாடகி ராணி காலமானார்

(UTV|COLOMBO)-தமிழ், சிங்களம், தெலுங்கில் ஏராளமான படங்களில் பாடியதுடன், இசை முரசு நாகூர் ஹனீபாவுடன் இணைந்து பாடல்களை பாடிய பழம்பெரும் பின்னணி பாடகி ராணி காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 75.

1951 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ரூபவாஹினி திரைப்படத்தில் தனது எட்டாவது வயதில் பாட தொடங்கியவர் ராணி.

பின்னர் தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஒடியா, சிங்களம், உஸ்பெக் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 500 திரையிசை பாடல்களை இவர் பாடியுள்ளார்.

தமிழில் தேவதாஸ் கல்யாணி, கல்யாணம் பண்ணி பார், மோகன சுந்தரம், தர்ம தேவதை, சிங்காரி, எம்.ஜி.ஆர். நடித்த ஜெனோவா திரும்பி பார், சிவாஜி கணேசனும் எம்ஜிஆரும் இணைந்து நடித்த ஒரே படமான கூண்டுக்கிளி, நல்ல காலம், பணம் படுத்தும் பாடு, குணசுந்தரி, கதாநாயகி, காவேரி முதல் திகதி அமர கீதம், மர்ம வீரன், காலம் மாறி போச்சு, பாசவலை, படித்த பெண், அலாவுதீனும் அற்புத விளக்கும், எங்கள் வீட்டு மகாலட்சுமி, பானை பிடித்தவள், பாக்கியசாலி, லவகுசா உள்ளிட்ட பல படங்களில் இவர் கதாநாயகியர்களுக்காக குரல் கொடுத்துள்ளார்.

மேலும் இலங்கை நாட்டின் தேசிய கீதமும் இவரால் பாடப்பட்டதாகும். தனது கம்பீரக் குரலால் இஸ்லாமிய கீதங்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப கட்ட பிரசார பாடல்களை பாடிய ´இசைமுரசு´ நாகூர் ஹனீபாவுடன் இணைந்து சில பாடல்களை ராணி பாடியுள்ளார்.

1965 ஆம் ஆண்டுக்கு பின்னர் வாய்ப்புகள் குறைந்ததால் திரைப்படங்களில் பாடாமல் இருந்த ராணி பல்வேறு இசை கச்சேரிகளை நடத்தி வந்தார்.

சமீபகாலமாக உடல்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பாடகி ராணி தனது 75 ஆம் வயதில் ஐதராபாத் நகரில் காலமானார்.

அவரது மறைவுக்கு திரையுலகம் மற்றும் இசைத்துறையை சேர்ந்த பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

தனியார் பேருந்துகள் பணிப்புறக்கணிப்பில்

விண்டோஸ் இயங்கு தளம் ஊடாக பரவிவரும் வைரஸ்

சித்திரவதைகள் தடுப்பு தொடர்பான ஐக்கிய நாடுகளின் உபகுழு இன்று(02) இலங்கைக்கு