வகைப்படுத்தப்படாத

பிணை முறி கொடுக்கல் வாங்கல் குறித்த விசாரணை 31ம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதியிடம்

(UTV|COLOMBO)-சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் பிணை முறி கொடுக்கல் வாங்கல் குறித்த விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு, தமது அறிக்கையை 31ம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளது.

அந்த ஆணைக்குழுவின் செயலாளர் சுமதிபால உடுகமசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
அச்சிடுவதில் சிக்கல் நிலவுகின்ற போதும், எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னர் எவ்வாறேனும் அந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆணைக்குழு ஜனாதிபதியினால் இந்த வருடம் ஜனவரி 27ம் திகதி நியமிக்கப்பட்டது.
அத்துடன் அதன் அதிகாரக்காலம் கடந்த 8ம் திகதியுடன் நிறைவடையவிருந்த நிலையில், அது எதிர்வரும் 31ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நீட் தேர்வில் தோல்வி – மாணவி தற்கொலை

ரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானதில் 05 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியா சர்வேச விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு