பிஜி தீவில் இன்று திங்கட்கிழமை (14) அதிகாலை 1.32 மணியளவில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு 174 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழப்புகள் அல்லது சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதேவேளை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) மியான்மர் மற்றும் தஜிகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.