உள்நாடு

பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளவதில் அவசரப்பட தேவையில்லை

(UTV | கொழும்பு) – கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்த அவசரப்படத் ​தேவையில்லை என நோயியல் பிரிவின் பிரதானி விஷேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

யாரேனும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டிருப்பின் 2 தொடக்கம் 10 நாட்களினுள்லேயே அதனை அறிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் இலங்கையில் கொரேனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4,628 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களுள் 3,306 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன் 1,309 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

 10 மணிநேர நீர்வெட்டு இன்று!

வேலை இழந்த போதிலும் சப்புகஸ்கந்த ஊழியர்களுக்காக மாதாந்தம் 100 மில்லியன் ரூபா செலவு

உயர் நீதிமன்ற வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு