கேளிக்கை

‘பிக் பாஸ்’ வீட்டை விட்டு வௌியேறிய ஆர்த்தியின் அதிரடி ட்விட்!!!

(UDHAYAM, COLOMBO) – நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் அனைவரும் எதிர்பார்த்தபடியே ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்.

மற்றவர்களை போலி போலி என்று கூறிக்கொண்டிருந்த ஆர்த்தி, உண்மையில் ஓவர் ஆக்டிங் செய்வதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களும், மிமிக்களும் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஆர்த்தி தற்போது முதன்முதலாக டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

‘நான் மீண்டும் வந்துவிட்டேன். என்னை கேலி செய்வதில் இதுவரை பிசியாக இருந்தவர்கள் இனி ஓய்வு எடுக்கலாம்.

ஆனால் ரசிக்கும்படியான மிமிக்களை செய்திருந்தீர்கள்.

அனைவருக்கும் நன்றி.

பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்தபோது எனது கேரக்டருக்கான உங்களது கருத்துக்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டேன்.

அனைவருக்கும் நன்றிகள்’ என்று தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் கமல்ஹாசனிடம் தான் வெளியேறியது எதனால் என்ற கேள்விக்கு பதிலளித்த ஆர்த்தி, ‘மக்களுக்கு உண்மையாக இருப்பவர்களைவிட நடிப்பவர்களைத்தான் அதிகம் பிடித்துள்ளது என்ற உண்மையை தெரிந்து கொண்டதாக கூறியிருந்தார்.

இதேவேளை , அவரின் டுவிட்டரில் ரசிகர்களின் பிக்பாஸ் குறித்தான கேள்விகளுக்கு நடிகை ஆர்த்தி தற்போது பதிலளித்து வருகிறார்.

Related posts

சினேகனுடன் இணையும் ஓவியா….

நடிகை ஜாக்குலினின் ஜாமீன் நீட்டிப்பு

சினிமாவுக்காக எதையும் செய்ய தயார்…