கிசு கிசு

பிக் பாஷ் லீக்கில் விளையாடிய ஆஸி வீரர் மீது சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டு

(UTV |  அவுஸ்திரேலியா) – பிக் பாஷ் லீக்கில் விளையாடிய அவுஸ்திரேலிய உள்நாட்டு கிரிக்கெட் வீரர் ஆரோன் சம்மர்ஸ், சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்குள்ளான பின்னர் திங்களன்று டார்வின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அபுதாபி டி-10 லீக்கில் டெக்கான் கிளாடியேட்டர்களுக்காக விளையாடிய சம்மர்ஸ், வெள்ளிக்கிழமை பிற்பகல் ஃபென்னி விரிகுடாவில் கைது செய்யப்பட்டார்.

பொலிஸார் பிடியாணையை நிறைவேற்றி அவரை கைதுசெய்ததுடன், அவரது கையடக்கத் தொலைபேசியையும் பறிமுதல் செய்துள்ளனர்.

அந்த தொலைபேசியியல் சிறுவர் துஷ்பிரயோகப் பொருட்கள் அடங்கிய பல வீடியோக்கள் மற்றும் பத்து சிறுவர்களுடன் தொடர்பு கொண்டதற்கான சான்றுகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அதனால் 25 வயதான வேகப்பந்து வீச்சாளர் சம்மர்ஸ் மீது, சிறுவர் துஷ்பிரயோகப் பொருட்களை வைத்திருந்தமை, சிறுவர்களை துஷ்பிரயோகத்தற்கு உட்படுத்தியமை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டது.

Related posts

“டேவிட் பெக்காம்” கார் ஓட்டத் தடை!

இன்னும் சில நேரத்தில் அமைச்சரவையில் மாற்றம்

கொழும்பில் இளம் பெண்களுக்கு ஆபத்து!பொலிஸார் எச்சரிக்கை